தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஆஸ்கார் விருது நடிகை

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படம் ' The Extraordinary Journey Of The Fakir' என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை Berenice Bejo அவர்கள் தற்போது இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை ஈரான் இயக்குனர் Marjane Satrapi என்பவர் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கனடா நாட்டின் இயக்குனர் Ken Scott இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது 'விஐபி 2', 'வடசென்னை' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் வரும் மே மாதம் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அதிமுகவை காப்பாற்ற அதிரடி முடிவை எடுப்பேன். பிரபல நடிகை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் அவருடன் பல படங்கள் நடித்த பிரபல நடிகை லதா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவின் விசுவாசி. கட்சியில் நேரடியாக பணிபுரியவில்லை எனினும் அவ்வப்போது அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்...

சிவாஜி பேரனின் 2வது படத்தில் விஷ்ணு-மஞ்சுமா மோகன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரனும் ராம்குமார் மகனுமான துஷ்யந்த் தயாரித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது தயாரிப்பை தொடங்கவுள்ளார்...

அதிமுக பெண் எம்.எல்.ஏ திடீர் மாயம். நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

ஓபிஎஸ், சசிகலா யாரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தாலும் அவர் கண்டிப்பாக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளது.

சசிகலா ஆதரவு அமைச்சருக்கு அரவிந்தசாமியின் பதிலடி

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற அசாதாரண சூழ்நிலை இருக்கும் நிலையில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம், நையாண்டியுடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவர்தான் முதல்வர். சு.சுவாமி

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சற்றுமுன்னர் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து கூறும்போது, 'சசிகலா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை...